செய்திகள்
 

ஏடு திருகோணமலை சிறார்களின் மதிப்பிட்டு நாள்

ஏடு திருகோணமலை சிறார்களின் மதிப்பீடு ஜனவரி மாதம் 20ம் திகதி திருகோணமலையில் நடைபெற்றது.
இது 2013ம் ஆண்டிற்கான முதலாவது மதிப்பிடு ஆகும். இலங்கையிலுள்ள ஏடு உறுப்பினர்கள் வருடத்திற்கு மூன்று முறை சிறார்களின் கல்வி முன்னேற்றத்தையும் நலன்களையும் மதிப்பிடுகின்றனர் (ஒவ்வொரு பாடசாலைத்தவணையும்).
இச்சிறார்கள் பெற்றோர்களுடனோ அல்லது பாதுகாவலர்களுடனோ அழைக்கப்பட்டு மதிப்பிடப்படுவர். இத்துடன் சிறார்கள் அவர்களது பாடசாலைகளிலும் தொடர்ச்சியாக மதிப்பிடப்படுகின்றனர்.

ஏடு திருகோணமலையினால் நடைமுறைப்படுத்தப்படும் தாபரிப்புபெற்றோர் திட்டத்தின் கீழ் உள்ள சிறார்களில் சிலர் கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். இவர்களுக்கான பரிசுகளும் மதிப்பீட்டு நாளில் வழங்கப்பட்டது.

தாபரிப்பு பெற்றோர் முறையினால் பராமரிக்கப்படும் அநேகமான சிறார்கள் தந்தையை இழந்து தாயினால் பராமரிக்கப்படுகின்றனர். தாய் தந்தையரை இழந்த சிலர் நெருங்கிய உறவினர்களான பாட்டி, சிறியதாயுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தற்பொழுது ஏடு திருகோணமலை 65 சிறார்களுக்கு இத்தாபரிப்பு பெற்றோர் திட்டத்தின் மூலம் உதவி வருகின்றது.
ஏடு திருகோணமலைக்கான நன்கொடை அமைப்புகளினதும் நன்கொடையாளர்களினதும் விபரங்கள் பின்வருமாறு.
1.மட்டக்களப்பு பின் தங்கியோருக்கான அபிவிருத்தி அமைப்பு ஜக்கிய இராச்சியம்-10 சிறார்களுக்கு உதவுகின்றது.

 2.   உதயம் - சுவிற்சலாந்து 10 சிறார்களுக்கு உதவுகின்றது.

3.  முனைப்பு – சுவிற்சலாந்து  -10 சிறார்களுக்கு உதவுகின்றது.

4.         - இவ்வாலயம் 10 சிறார்களுக்கு உதவுகின்றது.

5.   திரு. ரி. பாலேந்திரன்- 10 சிறார்களுக்கு உதவுகின்றரர்.

6  திரு. பி. வரதன்- 7 சிறார்களுக்கு உதவுகின்றரர்.

7.ஏனைய சிறார்கள் டாக்டர்  மை.ஜ.நீ. உதவுகின்றனர்.

ஏடு திருகோணமலை சிறார்களின் மதிப்பிட்டு நாள்
கானொளியைப் பார்வையிட காணொளியை
அழுத்தி  recent videos, update-1 ஜ அழுத்தவும்.

Click here for video


 Copyright © 2011 aedu-international.org. All Rights Reserved.